Tuesday, September 2, 2008

வெளிச்சத்தை நோக்கி



அடிப்படைவசதிகள் ஏதுமற்ற மிகவும் பின் தங்கிய ஆதிவாசி கிராமம் கூடப்பட்டி கோவை மாவட்டம் காரமடை வட்டாரம் வெள்ளியங்காடு பஞ்சாயத்தின் கடைகோடியில் கோவைஇரயில் நிலையத்திலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மலைக்கிராமம்
கிட்டத்தட்ட அந்தகிராமம் உருவான காலத்திலிருந்து மற்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக விட்டு விட்டு கிடைத்தபோதும் மின்சாரம் என்பதுமட்டும் எட்டாக்கனவாக இருந்து வந்தது
என்எம்சிடி ஆதி திட்டம் உருவான பின்பு 2007 ஜூலை மாதம் அங்கே ஆதி பெண்கள் சுய உதவிக்குழுவும் 2007 ஆகஸ்ட் மாதம் ஆதி இளைஞர் குழுவும் ஏற்படுத்தப்பட்டது

அவர்களுக்கு தொடந்து கொடுத்த பல்வேறு பயிற்சியினாலும் எனெம்சிடி ஆதி திட்டம் ஏற்படுத்திக்கொடுத்த தொடர்பினாலும் தங்களுக்கான தேவைகளை தாங்களே அரசாங்கத்திடம் கேட்டுப்பெறுகிற தைரியமும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிற கிற பழக்கமும் கைவரப்பெற்றனர்

ஊரில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு அவர்கள் ஆதியின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் மற்றும் களப்பணியாளர்கள் சுமதி, மற்றும் செல்வன் ஆகியோரை கூட்டத்திற்க்கு அழைத்து ஆலோசித்தபின் முதலில் அவர்கள் மின்சாரவசதியை கையிலெடுத்துக்கொண்டனர்

இப்பிரச்சினையை வழக்கம்போல் அல்லாமல் முறையாகவும் தீவிரமாகவும் கையாள ஆரம்பித்தனர் இது தொடர்ந்து பயிர்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் தவறாமல் கலந்துகொண்ட அக்கிராமத்தினருக்க என்எம்சிடி ஆதி திட்டம் கொடுத்த பரிசு


ஆதியின் களப்பணியாளர்களான செல்வன் சுமதி ஆகியோரின் வழிகாட்டுதலில் முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவெடுத்தனர் அதன்படி

இரண்டு குழுக்கக்ளோடு ஊர் மூப்பன் குறுதலை வண்டாரி ஆகியோர் இணந்து 9.11.2007 அன்று நேரடியாக மாவட்ட கலெக்டர் நீரஜ்மிட்டலை சந்தித்து தங்கள் ஊருக்கு மின்சாரவசதிவேண்டும் எனக்கேட்டு மனுக்கொடுத்தனர் மாவட்டஆட்சியர் ஆவனசெய்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் காத்திருந்தனர் ஆனால் நாட்களும் மாதங்களும் உருண்டதே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
பின்பு மாதா மாதம் மனுக்கொடுத்த அதே 9 ஆம்தேதியில் அவர்கள் ஏற்கனவே கொடுத்த விண்ணப்பத்தின் நகலில் தேதியிட்டு அனுப்புவதென முடிவெடுத்தனர் அதன்படியே கிட்டத்தட்ட ஒவ்வொருமாதமும் தவறாது செய்துவந்தனர். கிட்டத்தட்ட ஆறுமாதம் தொடர்ந்து அனுப்பியபின்பு மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து அவர்களின் தளராத முயற்சியை பாராட்டியதோடு உடனடியாக மின்சாரத்துறையிரை அழைத்து ப்பேசினார்
ஆனால் களத்தில் இருக்கிற சிக்கல்களால் மின்சார இணைப்பு கொடுக்க விரைவாக செய்ய முடியாது தாமதமாகும் என்று மின்சாரவாரியம் கைவிரித்துவிட்டது
மனமொடிந்த அவர்கள் தற்காலிகமாக சூரியவிளக்காவது பொருத்தப்படவேண்டும் என அழுத்தமாக முறையிட்டனர்
அவர்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து சூரியசக்தி விளக்குகள் 8.3.2008 அன்று பொருத்தப்பட்டது
மக்கள் இன்ப அதிர்சியில் ஆழ்ந்தனர்


நீண்டநாளாய் இருட்டுக்குள் கிடந்த அந்த கிராமம் இப்போது ஒளியில் மிதக்கிறது

ஆதி திட்டத்தின் மூலமாக அந்த கிராமத்திற்க்கு முதல்வெற்றி கிடைத்துவிட்டது
இது தொடரும் என்று உறுதியளித்தனர்


மின்சார வசதிக்கான முயற்சியில் கிடைத்த வெற்றி அவர்களை வெகுவாக யோசிக்கவைத்தது விளைவு
ஊரைச்சுற்றி மூன்று ஆறு ஓடுகிறது ஆனால் அந்த தண்ணீரை எடுத்து விவசாயம் செய்ய எங்களால் முடியவில்லை கடினப்பட்டுக்கிடக்கிற இந்த மண்னை உழ எந்த ட்ரேக்டர் காரனும் இந்த பள்ளம் தாண்டி வருவதுமில்லை ஆகவே தங்களுக்கு டீசல் பம்பும் ஒரு சின்ன கை டிரேக்டரும் இருந்தால் எப்படியாவது விவசாயம் செய்து முன்னேறுவோம் என்று வனத்துரைக்கு விண்ணப்பம் போட்டனர்

மின்வசதிக்காக கையிலெடுத்த அதே பாணியை இந்த முயற்சியிலும் கடைபிடித்தனர்

அதற்கு பலன் கைமேல் கிடைத்தது

ஒரு டிரேக்டரையும் புதிய டீசல்மோட்டரையும் 14.4.2008 . அன்று வனத்துறை அளிக்க இப்போது கடுகளை உழுது திருத்தி விவசாயமுயற்சியில் கடுமையாக உழைத்துக்கொண்டிருகின்றனர் கிராமத்தினர்
கூடப்பட்டி வழியில் நடைபோட புதுக்காடு, கொரவண்கண்டி,சொரண்டி,அரக்கடவு உள்ளிட்ட ஆதி திட்டத்தின் அத்தனை ஊர்களும் இப்போது தயாராகிக்கொண்டுள்ளது