Monday, September 7, 2009







ஆதி வலைபின்னல் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது மற்ற நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நல்ல செயல்பாடுகள் best practices மற்றும் அவர்கள் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் செயல் திட்டங்கள் மற்றும் தனித்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பாய் இருக்கிறது

அப்படி என் எம் சிடிக்கு இரண்டு திட்டங்கள் பற்றிய அறிவு கிட்டியுள்ளது
1 குழந்தைகள் மன்றங்கள்

2 மாடல் பிளாட்




இவ்விரு திட்டங்களையும் 2009 ஆம் ஆண்டுக்கான நிதி திட்டங்களில் குறிப்பிடப்பவில்லையென்றாலும் அதற்கான ஒதுக்கீடு பெறப்படவில்லையென்ற போதும் என் எம் சி டி யால் இத்திட்டங்கள் நடைமுறைப்படுதப்பட்டுவருகிறது
மாடல் பிளாட்டில்

அப்பகுதியில் யானைகள் தொல்லைகள் இருப்பதால் அவை உணவாக உட்க்கொள்ளாத வெட்டிவேர் மற்றும் மண்ணுக்கு கீழ் விளையும் நிலக்கடலை ஆகியவை தாவரங்கள் அடையாளம் காணப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டது
பின்னர் விவ்சாயம் சார்பான் நிறுவனங்களை அணுகி கோரிக்கை விடப்பட்டது அதில் காரமடை அருகே உள்ள கான்கிரீன் எக்ஸ்போர்ட் நிறுவனம் மாடல் பிளாட் ஏர்படுத்திதர முன்வந்தது

முதன்முதலில் 10.3.2009 அன்று வெட்டிவேர் விவசாயம் குறித்த பயிற்சி அளித்தனர்

15.3.2009 அன்று கொரவன்கண்டி கிராமம் பார்வையிடப்பட்டு களம் தயார் செய்யப்பட்டது
10.52009 அன்று பயிர்விதைக்கப்பட்டது தற்போது அவற்றை பரமரித்து அறுவடை காலத்தை எட்டியுள்ளது

நிலக்கடலைக்கு உள்ளூர் அரிவின் அடிப்படையில் 10.1.2009 அன்றுஒரு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது பின்னர் தாயனூர் வங்கியில் ஆதி திட்டத்தின் மூலமாக 5000 ருபாய் கடனாக நீலம்மளுக்கு அளிக்கப்பட்டது 23.1.2009 லிருந்து அந்த தொகையில் களம் மற்றும் விதைகள் தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
தற்போது அறுவடை செய்யப்பட்டுளது