Monday, September 7, 2009

Evening center for TRIBE CHILDREN

சொரண்டிகிராமத்திற்க்கு மாலை நேர வகுப்பு ஒன்று ஏற்படுத்தி உதவவேண்டுமாய் கேட்டுக்கொண்டனர் மேலும் சொரண்டிக்கு அத்திக்கடவு கிராமத்திலிருந்து வந்து ஒருவர் மாலை நேர வகுப்பு நடத்திக்கொண்டிருந்ததாகவும் இப்போது அவர் யானை பயத்தால் வருவதில்லை எனவும் ஆகவே மாலைநேர வகுப்பிற்க்கு ஏற்பாடு செய்து தருமாறும் அங்குள்ள இளைஞர் மற்றும் பெண்கள் குழுக்கள் மூலமாக கோரிக்கையும் விடுத்தனர்

முதல் கட்டமாக ஊர்மூப்பன், 12.4.09 இளைஞர் குழுவின் பொறுப்பாளர்கள்,மகளிர் குழு பொறுப்பாளர்கள் கலந்து பேசப்பட்டது


20/4/2009 அன்று கிராமக் கூட்டம் நடத்தப்பட்டது அதில் ஊரில் உள்ள இளைஞர் குழு ,பார்வதி மற்றும் சொரண்டி மகளிர் சுய உதவிக்குழு அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டனர் , ஊர்மூப்பன் முன்னிலையில் நடபெற்ற அக்கூட்டத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் உயர மாலை நேர வகுப்பு எப்படியாகிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்

கலந்துரையாடல் தொடங்கியது

பள்ளியில் நன்றாக சொல்லிக்கொடுத்தால் மாலை நேரவகுப்பு அவசியமில்லைதானே -இது நான்

நாங்க வாத்தியார கொற சொல்ல மாட்டோம்

நாங்க பேசற மொழி வேற அவுங்க பேசற மொழி வேற

அதனால் எங்க ஆளுங்க எங்க மொழியில சொல்லிக்கொடுத்தா தான் புரியும்

தமிழ்தான் ஆனா கொஞ்சம் வித்த்யாசம் இருக்கும்

உதாரணத்துக்கு அம்மாவ இருளர் மொழியில் அக்கான்னுதான் சொல்லுவாங்க

அம்மா... ஆடுன்னா அது அவுங்களுக்கு ரொம்ப புதுசாதான் இருக்கும் அப்புறம் அவுங்க மொழிஆட்கள்தவிர வேறு யாரிடமும் அந்யோன்யமாக குழந்தைகள் பேசி பழகாது

பொதுவாவே நம்ம வாத்த்யார்கள் சிரிப்ப தூக்கி வீட்டுல போட்டுட்டு மில்டிரி மாதிரி ஒரு மூஞ்சிய தூக்கிவெச்சுட்டுதான் ஸ்கூலுக்கு வருவாங்க

ம் சரிதான்

உங்க மொழி பேசர வாத்தியார் ஸ்கூலில் இல்லையா?

இல்லை.

இதற்க்கும் முன்னால் சொல்லிகொடுத்தவர்கள் யார்?

வெளியில் இருந்து வந்து சொல்லிக்கொடுத்தனர்

மீண்டும் ஒருவர் வெளியில் இருந்து வந்து சொல்லிக்கொடுப்பவர் தொடர்ந்து வருவார்கள் என்று என்ன நிச்சயம் ?
ஆமாம் யானைக்காட்டில் அவர்கள் தொடர்ந்து வருவது பிரச்சனைதான்

என்ன செய்யலாம்?

நாமே ஒருத்தர் நடத்தலாமே?

ஆம் அதுதான் சரியான யோசனை?

அவர்களின் கல்வித்தகுதி என்ன ?

12 வது
இங்கே 12 வது படித்தவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்

9 பேர்..

பெண்கள் 5 பேர்

இவர்களில் யாராலும் மாலை நேரபள்ளி நடத்த இயலாதா?

இயலும்

அப்படியென்றால் யார் முன் வருகிறீர்கள்

ரமேஷ்

முருகன்

மூவரில் ஒருவர் முடிவு செய்யுங்கள்


ரமேஷ்


இப்படி இப்போது வெளியாட்களின் உதவி இல்லாமல் தங்கள் பகுதிக்குள்ளிருந்தே ஒருவரை வைத்து இளைஞர் குழு மிக நன்றாக மாலை வகுப்பை நடத்தி வருகிறது இதை மற்ற ஊர்களிலும் நடைமுறைபடுத்த மற்ற குழுக்கள் முயன்று வருகிறது ஊக்கத்தொகைக்காக கோவையிலிருந்து dream maker என்னும் நிறுவனத்தை ADI திட்டத்தின் வழிகாட்டலில் சென்று சந்தித்தனர் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாதம் 250 ரூபாய் வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு வழங்கிவருகிறது
ஆனால் இளைஞர் குழுவை சேர்ந்த ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ளமறுத்து எங்கள்குழந்தைகளின் படிப்புக்கு வெளியிலிருந்து ஒருவருக்கு இருக்கும் அக்கறை எங்களுக்கும் வேண்டுதம்தானே! ஆகவே 100 ரூபாய் மட்டும் எழுது பொருட்கள் செலவுக்காக பெற்றுக்கொண்டு வகுப்பை தொடர்கிறார்

ரமேஷ் அந்தப்பகுதிக்கு ஒரு முன்னுதரணமாக விளங்குகிறார் , இன்னும் ஒன்பது கிராமங்கள் இந்தவசதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது இதை படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்கள் மற்ற கிராமங்களுக்கு உதவ நீங்கள் உறுதுணையாய் இருங்கள் உதவும் நன்கொடையாளரின் பெயரிலோஅல்லது அவர்கள் பெற்றோர் பெயரிலேயோ அம்மையம் செயல்படும்
தொடர்புகொள்ள
பி சுமதி,
ஆர் செல்வன்,
குறிஞ்சி மையம் ,
கோபனாரி,
தோலம்பாளையம் அஞ்சல்
கோவை 641114
தொடர்பு தொலை பேசி 0422 2401747